Stray Dogs | Rabies | நாய் கடிக்கு மருந்து இல்லை என சொன்னதா மருத்துவமனை?
நாய் கடிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக திசையன்விளை மருத்துவமனை விளக்கம்
திசையன்விளை மருத்துவமனையில் நாய் கடிக்கும் மருந்து இல்லை என்ற புகாருக்கு, மருத்துவமனை தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேருந்து நிலையத்தில்
சுற்றித்திரிந்த வெறிநாய் 10க்கும் மேற்பட்டோரை கடித்தது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். சிலர் மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி மற்றும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு சென்றவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருந்து இல்லை எனவும் ஆம்புலன்ஸ் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர் .