Kodaikanal-இல் வீசிய சூறைக்காற்று - மின்கம்பங்கள் மீது அடுத்தடுத்து சரிந்து விழும் மரங்கள்

Update: 2025-05-29 03:39 GMT

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருவதால் மேல்மலை கிராமத்திற்கு செல்லும் சாலைகளில் உள்ள பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் மேல் பகுதியில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்லும், மின்சார வழித்தடம் வனப்பகுதியில் உள்ளதால் மின் கம்பங்கள் மற்றும் கம்பிகள் மீது மரங்கள் தொடர்ந்து முறிந்து விழுவது தொடர்கிறது. இதன் காரணமாக நான்காவது நாளாக மலை கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உயர் கோபுரங்கள் அமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்