பாம்பு கடி விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்வதற்கு, ஒரு சிறப்பு மையம் உருவாக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்தியாவில் பாம்பு கடியால் ஆண்டுதோறும், 50 முதல் 60 பேர் உயிரிழப்பதால், மருந்தை உள் நாட்டில் உற்பத்தி செய்வது அவரச தேவையாக உள்ளது. இதனால், பாம்பு விஷ முறிவு மருந்து உற்பத்திக்கான ஒரு சிறப்பு மையம் உருவாக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. உயர் தரம் கொண்ட மருந்தை தயார் செய்தல், பாம்பு முறிவு மருந்து தொடர்பான சப்ளை செயினை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் முக்கிய மையமாக இது அமைய உள்ளது. மேலும், ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய சந்தைகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யும் மையமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.