ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் - மக்கள் வைத்த கோரிக்கை

Update: 2025-01-27 16:26 GMT

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பிழையுடன் இடம்பெற்றுள்ள கிராமங்களின் பெயர்களை திருத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல இடங்களில் ஸ்மார்ட் அட்டைகளில் கிராமங்களின் பெயர்கள் தவறாகப் பிழையுடன் இடம்பெற்றுள்ளது. இதனால், ஸ்மார்ட் அட்டையை சான்றாகக் காண்பித்து பெறப்படும் மற்ற ஆவணங்களிலும் தவறாக கிராமங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. இந்நிலையில், ஸ்மார்ட் கார்டு தொடர்பான இணையதளத்தில் பிழையுடன் இடம்பெற்றுள்ள கிராமங்களின் பெயர்களை சரியாக மாற்ற வேண்டும் என்றும், ஸ்மார்ட் கார்டுகளிலும் பிழையை திருத்தித் தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்