Sivaganga | TN Police | இளைஞர் ஓட ஓட வெ*ட்டி படுகொ*ல - போலீஸ் விசாரணை

Update: 2025-11-02 10:34 GMT

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முக்கு பகுதியைச் சேர்ந்த 20 வயது ராஜேஷ் என்ற இளைஞர் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூவர் ராஜேஷை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். போலீசார் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ராஜேஷ் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்