பள்ளியில் Lunch சாப்பிட்ட சிறிது நேரத்தில் நின்ற மாணவி மூச்சு

Update: 2025-06-20 14:52 GMT

தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பரையூரை சேர்ந்த செல்வக்குமார் என்பவரின் மூத்த மகள் காமாட்சி பிரியா, பண்ணைக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளியில்

தனது தங்கையுடன் அமர்ந்து மதிய சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு சென்ற காமாட்சி பிரியா, சிறிது நேரத்திலேயே தலை மற்றும் பின்பக்க கழுத்து வலிப்பதாக கூறி மயக்கம் அடைந்தார்.

பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்