தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்
79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்ற நமது தேசிய பயணத்தை வழிநடத்தக்கூடிய பங்கும், பொறுப்புணர்வும் தமிழ்நாட்டுக்கு உள்ளது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் கூட,
அவமானகரமான சமூக பாகுபாடு பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டில் பரவலாக நிலவுவது, நாம் கூட்டாக அவமானப்படக்கூடிய விஷயமாகும். நான் அவ்வப்போது இதற்கு எதிராக எனது குரல் எழுப்பி வந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும்,
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல், தேசிய சராசரியை விட மிகவும் குறைவானதாகவும், 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல், கழித்தல்களை கூட செய்ய இயலவில்லை என்றும் விமர்த்துள்ளார்.
அத்துடன், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்களும், போதைப்பொருள்கள் புழக்கமும் அதிகரித்துவிட்டதாகவும்,
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார்.