பெண்கள், குழந்தைகளை கள் குடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் - பரபரப்பு வீடியோ
பனை விழாவில் கள் குடித்த குழந்தைகள், பெண்கள்- அதிர்ச்சி சம்பவம்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே நடைபெற்ற பனை விழாவில் குழந்தைகளை கள் குடிக்க வைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆ.சப்பாணிப்பட்டி கிராமத்தில் உள்ள பனைத்தொழிலாளர்கள், பனை மரத்திற்கு பொங்கல் வைத்து, கள் இறக்கி படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
வழிபாடு முடிந்த பிறகு பெண்களும் குழந்தைகளும் கள்ளை பருகி, அது ஒரு இயற்கை உணவுப்பொருள் என்று தெரிவித்தனர். எனவே, கள் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், குழந்தைகளை கள் குடிக்க வைத்தது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.