குலசை முத்தாரம்மன் கோயில் அர்ச்சகரின் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
திருச்செந்தூர் அருகே புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அர்ச்சகரின் வீட்டில் 107 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குலசை முத்தாரம்மன் கோயில் அர்ச்சகரான ஞானமுத்து பட்டர் என்பவர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மகனும், மகளும் கும்பகோணம் மற்றும் கோவையில் தங்கி படித்து வருகின்றனர். இவரது மனைவி பிரியா தனது தாயாரின் வீட்டில் சில நாட்களாக தங்கிவிட்டு மீண்டும் குலசேகரன்பட்டினத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு 107 பவுன் நகைகள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.