அரசு நிகழ்ச்சியில் ஆர்டிஓ-வை முற்றுகையிட்ட நபரால் அதிர்ச்சி

Update: 2025-08-13 02:29 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் போலி பத்திர பிரச்னையால் பாதிக்கப்பட்ட நபர், ஆர்.டி.ஓவை முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட பைபாஸ் சாலையில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி ஆர்.டி.ஓ சிவா தலைமையில் நடைபெற்றது. அப்போது தன்னுடைய இடத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.டி.ஓ. சிவாவை பரசுராமன் என்பவர் முற்றுகையிட்டு முறையிட்டார். உடனடியாக அருகில் இருந்த திமுக நிர்வாகிகள் அவரிடம் சமாதானம் பேசி, அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்