சிவகங்கை அருகே தனது நிறுவனத்தில் பணிபுரிந்த பட்டதாரி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மென்பொருள் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடியில் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் டார்வின் ராஜ், அப்பெண்ணிடம் வேலை வழங்குவதாக கூறி, அவரது சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு , ஒப்பந்தம் செய்து பணியில் அமர்த்தி உள்ளார். பின்னர் அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேலைக்கு செல்வதை நிறுத்திய நிலையில், டார்வின் அவரை பணிக்கு வர அழைத்து மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.