ஆளில்லா வீட்டில் அடுத்தடுத்து கைவரிசை - CCTV யில் சிக்கிய சொக்கா போடாத திருடன்

Update: 2025-06-24 09:59 GMT

ஆளில்லா வீட்டில் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய நபர் குறித்து விசாரணை

திருப்பூர் சர்க்கார் பெரியபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. லோட்டஸ் கார்டன் மற்றும் ACS மாடர்ன் சிட்டி ஆகிய 2 பகுதிகளில் ஆளில்லாத வீட்டின் பீரோவில் இருந்த பணத்தை மர்மநபர் திருடியதாக கூறப்படுகிறது. இதேபோல, மற்றொரு வீட்டில் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி பதிவில், மேலாடை அணியாத மர்மநபர் ஒருவர் வந்து செல்வது பதிவாகியுள்ளது. இதனிடையே, ஒரு நாய் மர்மமாக இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. மர்மநபர்கள் திருடுவதற்காக நாய்க்கு விஷம் வைத்தார்களா? உள்ளிட்டவை குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்