தன்னை பற்றி பரவும் தகவல்கள் வதந்தி என சீரியல் நடிகை அமுதா கூறியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும்,, தனக்கும் தன் கணவருக்கும் பிரச்சினை என்றும் பரவும் தகவல்கள் போலியானவை என்று கூறியுள்ளார். தான் ஊரில் இருக்கிறேன் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.