அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - தமிழக அரசு தகவல்

Update: 2025-01-17 02:51 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையிலுள்ள 3 குற்ற வழக்குகளில், 517 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமின் தீர்ப்பை திரும்பப் பெறக்கோரி சென்னையை சேர்ந்த வித்யா குமார் தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பாதிக்கப்பட்டவர்கள் 222 பேர், பொது ஊழியர்கள் 212, விசாரணை அதிகாரிகள் 39, பிற சாட்சிகள் 44 என மொத்தம் 517 சாட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்துறையில் பணியில் இருப்பவர்கள் 9 பேர், ஓய்வு பெற்றவர்கள் 29 பே​ர் உள்ளிட்டோர் அடங்குவர்.இந்த பதில் மனுவை ஏற்று உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்