மரங்களைக் கட்டித்தழுவி முத்தமிட்ட சீமான்
திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் 30ம் தேதி மரங்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். முன்னதாக அருங்குளம் பகுதியில் உள்ள மரங்களை பார்வையிட்டு கட்டித்தழுவி முத்தமிட்ட சீமான், மரங்களோடு பேசினார். மரம் மண்ணின் வரம் என்பதை மனித சமுதாயத்திற்கு உணர்த்தும் வகையில், மரங்கள் தினத்தன்று மரங்கள் மாநாடு நடத்த உள்ளதாக தெரிவித்தார்.