அரசு பள்ளியிலே மாணவன் கொலை - வீட்டு பட்டா.. உடலை வாங்க பெற்றோர் சம்மதம் gangwar | asipuramstudent

Update: 2025-02-28 05:01 GMT

ராசிபுரத்தில் அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவரை கழிவறையில் வைத்து அடித்து கொலை செய்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கவின்ராஜை சகமாணவன் பள்ளி கழிவறையில் வைத்து தாக்கியதில் கவின்ராஜ் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், பிறகு கொலை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மாற்றி அதே பள்ளியில் பயிலும் சக மாணவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்நிலையில், மாணவர் கவின்ராஜ் உயிரிழந்த விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்கக்கோரி அவரது பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து கவின்ராஜின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்