School Students | Accident | ஆசை ஆசையாய் போட்டிக்கு சென்ற மாணவர்கள்.. நடுவே வந்த எமன் கலைந்த கனவு

Update: 2025-10-31 12:24 GMT

தனியார் பள்ளியில் நடைபெறும் கணித வினாடி வினா போட்டியில் பங்கேற்க சமுத்திராபட்டி அரசு பள்ளி மாணவர்கள் நத்தம் நோக்கி ஆட்டோவில் வந்துள்ளனர். அப்போது நிகழ்ந்த இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சின்னகற்பூரம்பட்டியைச் சேர்ந்த நைனம்மாள் உயிரிழந்தார். மேலும் மாணவ மாணவிகள், ஓட்டுநர் உள்பட 11 பேர் காயமடைந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உறவினர்கள் உயிரிழந்தவரின் உடலை கண்டு கதறியழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்