School Student Dead || ஜிம்மில் பயிற்சி மயங்கி விழுந்து உயிரிழந்த -12ம் வகுப்பு மாணவன்

Update: 2025-10-10 02:04 GMT

உடற்பயிற்சிக் கூடத்தில உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவர் ஒருத்தரு திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்திருக்காரு.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் முகமது பாஹிம், அங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக, கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகமது பாஹிம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்