தூத்துக்குடியில், டாஸ்மாக் பாரில் வாளுடன் வந்து ரவுடிகள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சுப்பையாபுரம் 2வது தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், ரவுடி அண்ணாமலை மற்றும் மற்றொரு நபர் வாளுடன் நுழைந்து, மது அருந்தியவர்களை பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடிய நிலையில், ஊழியர்கள் கடையை மூடி விட்டு தப்பினர். தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.