திருட வந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால்.. ரோஸ் மில்க்போட்டு குடித்த திருடர்கள்
கஷ்டப்பட்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் திருட வந்தும், ஒன்றும் கிடைக்காததால் விரக்தியில் ஃப்ரிட்ஜில் இருந்த பாலில் ரோஸ் மில்க் தயார் செய்து குடித்து விட்டு திருடர்கள் தெம்பாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி நேதாஜி நகரில் பசல் என்பவரது வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பீரோவை உடைத்து உள்ளே பார்த்த போது பணம், நகை எதுவும் வைக்கப்படாததால் நொந்து போய் ரோஸ் மில்க் போட்டு குடித்து விட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.