தஞ்சையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், திமுக முன்னாள் எம்.பி.-யுமான ஏ.கே.எஸ். விஜயனின் வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீஸார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் தான் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.