Roadaccdient | பிறந்தநாள் கொண்டாடிய ஒரே வாரத்தில் 1 வயது குழந்தை மரணம் - தலையில் அடித்து கதறிய தாய்
சாலை விபத்து - ஒரு வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஒரு வயது குழந்தையும், ஒரு பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் வாடகை ஆட்டோவை எடுத்துக் கொண்டு தனது காலில் இருந்த காயத்தை மருத்துவமனையில் காண்பிப்பதற்காக தனது ஒரு வயது குழந்தையான தமிழினியன் உட்பட தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தார். பெருங்குளம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது ஆட்டோவானது விபத்துக்கு உள்ளானது. இதில், குழந்தை தமிழினியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் அத்தையான ராணியும் உயிரிழந்தார். இந்த சூழலில், கடந்த வாரத்தில் குழந்தை பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், விபத்தில் உயிரிழந்தது கண்கலங்க வைத்து உள்ளது.