ரோடு ரோலர் இயந்திரம் மோதி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு
சென்னை கோயம்பேடு சிவன் கோவில் வடக்கு மாட வீதியில், ரோடு ரோலர் இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், பாஸ்கர் ராஜா என்ற மாற்றுத் திறனாளி உடல் நசுங்கி உயிரிழந்தார். பாஸ்கர் ராஜா தனது மனைவி சாந்தலட்சுமியுடன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு சாலை போடும் பணியில் இருந்த ரோடு ரோலர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, அவர் மீது மோதியது. இதில், பாஸ்கர் ராஜா உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் வெங்கடேசன் தப்பிச் சென்று விட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார், ஒப்பந்ததாரர் பாலாஜியிடம் விசாரித்து வருகின்றனர்.