``இதான் 2 கிலோவா? எங்க போச்சு மிச்சம்?’’ - நம்பர் 1 ரேஷன் கடையில் தில்லுமுல்லா? ஷாக்கிங் வீடியோ
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ரேஷன் கடையில் எடை குறைவாக பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி, ஊழியரிடம் பொருள் வாங்கிய நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. பாலசமுத்திரம் பகுதியில் உள்ள நம்பர் 1 ரேஷன் கடையில் பொருள் வாங்கிய நபர், கிலோவிற்கு 50 கிராம் முதல் 250 கிராம் வரை எடை குறைவாக பொருட்கள் வழங்குவது குறித்து ஊழியரிடம் வாக்குவாதம் செய்தார்.