RCB | Bengaluru | Virat Kohli | ரேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சு... RCB அணி விற்பனைக்கு..?
ஐபிஎல்லில் ஆர்.சி.பி டீம் விற்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 ஆண்டு ஏக்கத்திற்கு பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாதித்தது.
இதனை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டனர். ஆனால், வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழக்க, துக்கநாளாக மாறியது.
தொடர்ந்து ஆர்.சி.பி நிர்வாகம் மீது வழக்குப்பதியப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.சி.பி அணியின் உரிமையாளரான டியாஜியோ நிறுவனம், முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட சில பங்குகளையோ விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக 16 ஆயிரத்து 834 கோடி ரூபாய்க்கு அணியை விற்க டியாஜியோ நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.