Ranipet | Army Man |மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு எஸ்.எம்.சுகுமார் நேரில் அஞ்சலி

Update: 2025-08-05 04:54 GMT

Ranipet | Army Man | மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு எஸ்.எம்.சுகுமார் நேரில் அஞ்சலி

உத்தரகாண்டில் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், நேரில் அஞ்சலி செலுத்தினார். ஆற்காடு அடுத்த ரத்தனகிரி கீழ்மின்னல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயக்குமார். இவரது மகனான 30 வயதான பிரவீன் குமார் கடந்த 2015ம் ஆண்டு முதல் ராணுவத்தில் சேவையாற்றி வந்தார். கடைசியாக உத்தரகாண்டில் சிப்பாய்யாக பணியில் இருந்த வந்த நிலையில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பிரவீன் குமாரின் உடல் சொந்த ஊரான கீழ்மின்னல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை அறிந்த ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், நேரில் சென்று ராணுவ வீரரின் உடலுக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்