Railways | UPI | ரயில்வே முதல் UPI வரை.. | இன்று முதல் அதிரடி மாற்றங்கள்

Update: 2025-10-01 15:08 GMT

அக்டோபர் 1 முதல் பல்வேறு புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.

ரயில்களில் டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண் கட்டாயம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, ஆதார் எண் சரிபார்ப்பு உள்ளவர்கள் மட்டுமே ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்குள் ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

தினசரி UPI பரிவர்த்தனை வரம்பு ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

யூபிஐ செயலியில் தனிநபர்களுக்கு இடையே money request சேவை நீக்கப்பட்டுள்ளது.

ஆதாரில் பெயர், முகவரி மாற்றுவதற்கான சேவை கட்டணம் 50 ரூபாயில் இருந்து, 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்