குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. ரேபிஸ் பாதித்த நாய்கள், மனிதர்களை கடித்தால் அவர்களுக்கும், அந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவின் பேரில், கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அவைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.