Pudhucherry | ADMK | அந்த ஐடியாவே வரக்கூடாது.. சிக்னல் வரும்போதே போராட்டத்தில் இறங்கிய அதிமுகவினர்..
புதுச்சேரியில் 100யூனிட்டுகு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு 20பைசா உயர்த்த இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுச்சேரி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வம்பாக்கீரைபாளையம் பகுதியில் உள்ள மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போலீசாரின் தடுப்புகளை மீறி அலுவலகத்தில் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.