பி.எஸ்.4 வாகன மோசடி | சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-05-05 13:41 GMT

தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பி.எஸ். 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூன் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்