அமெரிக்காவை திணறடிக்கும் போராட்டங்கள் - ராணுவ மேஜர் வெளியிட்ட பரபரப்பு கருத்து
அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்கள் தனிநபர்களை தற்காலிகமாக தடுத்து வைக்க அதிகாரம் உள்ளதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் கலிபோர்னியாவிலிருந்து பிற அமெரிக்க நகரங்களுக்கும் பரவியுள்ளன. இந்நிலையில் 700 கடற்படையினருக்கும் 4 ஆயிரம் தேசிய காவல்படையினருக்கும் மக்களை தடுத்து மட்டுமே வைக்க முடியும் என்றும், கைது செய்யும் அதிகாரம் இல்லை என்றும் அமெரிக்காவின் ராணுவ மேஜர் ஜெனரல் ஸ்காட் ஷெர்மன் கூறியுள்ளார்.