Biryani பிரியாணி மூலம் டிரம்புக்கு எதிர்ப்பு - அதே 25% அறிவித்து அதிரவிடும் சிவகாசி
சிவகாசியில் இந்தியா மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பை கண்டித்து, தள்ளுபடி விலையில் சிக்கன் பிரியாணி வழங்குவதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் உணவகத்தில், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 25- சதவீத வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிரம்ப் சிக்கன் பிரியாணி எனும் பிரியாணியை 25 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டிரம்ப் பிரியாணியை பொதுமக்கள் குடும்பத்துடன் உண்டு வருகின்றனர்.