ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் ஜனாதிபதி முர்மு வழிபாடு

Update: 2025-09-04 02:34 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் மேற்கொண்டார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, திருவாரூர் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவை முடித்து விட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில், சாமி தரிசனம் மேற்கொண்டார், அவருக்கு அர்ச்சகர்கள் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். பின்னர், இதுபோன்ற பிரமாண்டமான கோயிலை பார்த்தது கிடையாது, எனவும் இங்கு வந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது எனக்கூறிய முர்முவிடம் அர்ச்சகர்கள், கோயிலை பற்றி கூறினர். ஓம் நமோ நாராயணா என ஆறு முறை சொன்னால் நமது பாவங்கள் தீரும் என அர்ச்சகர் கூறியதையடுத்து, ஓம் நமோ நாராயண என ஆறுமுறை கூறி கண்ணீர் மல்க முர்மு வழிபாடு செய்தார். பின்னர், விமான நிலையம் நோக்கி புறப்பட்டு சென்ற முர்முவை காண, கொள்ளிடம் பஞ்சக்கரை அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மக்கள் காத்திருந்தனர். அவர்களை காண காரைவிட்டு இறங்கிவந்த முர்மு, பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். பின்னர், அவர்களுக்கு இனிப்பு வழங்க தனது பாதுகாவலர்களிடம் அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்