P.R. Kawai | "உயர்நீதிமன்றத்தை விட உச்சநீதிமன்றம் உயர்ந்தது அல்ல" - பி.ஆர்.கவாய் சொன்ன வார்த்தை
"உயர்நீதிமன்றத்தை விட உச்சநீதிமன்றம் உயர்ந்தது அல்ல"- பி.ஆர்.கவாய்
உயர்நீதிமன்றத்தை விட உச்சநீதிமன்றம் உயர்ந்தது அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய அவர், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சில பெயர்களை உயர்நீதிமன்ற கொலீஜியத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கலாம், ஆனால் உத்தரவிட முடியாது என்றார். உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஒன்றுக்கொன்று உயர்வானதோ, தாழ்வானதோ இல்லை என்றும், இரு நீதிமன்றங்களும் அரசமைப்பு சட்டத்திற்கு உள்பட்டவை என்றும் அவர் கூறினார்.