செம்மண் குவாரி வழக்கு - பொன்முடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் 20 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், அரசு தரப்பு சார்பில் 20 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.