"போலீஸ் தாக்கிய சம்பவம் - புதுச்சேரி சொசுகு விடுதியில் கவனிப்பு" - பகீர் பேட்டி
அடித்தது வெளியே தெரியாமல் இருக்க போலீஸ் விருந்து வைத்து கவனித்து கொண்டதாக பாதிக்கப்பட்டவர் பேட்டி
சென்னை போரூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த தன்னை போலீசார் சரமாரியாக தாக்கி, நடந்தவற்றை வெளியில் கூறாமல் இருக்க புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்து சென்று தடபுடலாக கவனித்தாக பாதிக்கப்பட்ட நபர் புகார் தெரிவித்துள்ளார். ஐயப்பன்தாங்கலை சேர்ந்த சண்முகப்பிரியன் என்பவர் போரூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றபோது காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. காவலர்கள் தாக்கிய சம்பவத்தை மறைக்க, போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரிக்கு அழைத்து சென்று 3 நாட்கள் ரக ரகமாக மது வாங்கி கொடுத்ததாக சண்முகப்பிரியன் தற்போது தெரிவித்துள்ளார். மருத்துவ செலவிற்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்த போலீசார், வீடு மற்றும் கடை உரிமையாளர்களை மிரட்டுவதாகவும், இதனால் தாம் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் சண்முகப்பிரியன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.