Tiruppur | பிரேக் விட்ட நேரத்தில் வேலை காட்டிய `குடுகுடுப்பை’ - திருப்பூரில் அதிர்ச்சி

Update: 2025-11-14 09:20 GMT

வெள்ளக்கோவில் அருகே தீத்தம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், இடைவேளையின்போது மாணவர்கள் தண்ணீர் குடிக்கவும், கழிப்பிடத்திற்கும் சென்றனர். இதில் 3ம் வகுப்பு பயிலும் மாணவன் கவுஷிக் மட்டும் மீண்டும் வகுப்பறைக்கு வராததால், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் தேடினர். இந்நிலையில், பள்ளிக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் கவுஷிக்கின் கையை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்த நபரை, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர், மூலனூர் ஒரத்துபாளையத்தைச் சேர்ந்த ராசு என்பதும், குடுகுடுப்பை மூலம் ஜோதிடம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. பள்ளி மாணவனை கடத்த முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்