கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த மூதாட்டி அணிந்திருந்த தாலிச் சங்கிலி மற்றும் தங்கக் காசுகளைத் திருடிய ராஜசேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சந்திரா என்கிற மூதாட்டி, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடலை பெறுவதற்குச் சென்ற மகள் செல்வி, தனது தாயார் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து விசாரித்த போலீசார், செல்வபுரத்தைச் சேர்ந்த ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.==