Petrol Diesel Tax | பெட்ரோல், டீசல் வரி- "மத்திய, மாநில அரசுகள்.." - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2025-10-07 14:56 GMT

பெட்ரோல், டீசல் அடிப்படை விலை மற்றும் வரி விவரத்தை ரசீதில் குறிப்பிடக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி பெட்ரோல் மற்றும் டீசல் ரசீதில் அதன் அடிப்படை விலை, வரி விவரம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான தகவல் பலகையை வாடிக்கையாளரின் கண்ணில் தெரியும்படி வைக்க பெட்ரோல் நிலையங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் ராம்குமார் ஆதித்யன் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்