குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் எடுத்த முடிவு ஸ்தம்பித்த போக்குவரத்து

Update: 2025-04-28 08:55 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் கடந்த சில மாதங்களாகவே முறையாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராத நிலையில் கடும் அவதிக்கு ஆளான மக்கள் கோடைகாலத்தில் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகவே முறையாக குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் இன்று காலிங்குடங்களுடன் மணப்பாறை - துவரங்குறிச்சி பிரதான சாலையில் பன்னாங்கொம்பு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தானத்தம் போலீசார் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தில் அரை மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்