பயங்கர சத்தத்தை கேட்டு வெளியே வந்து பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சி

Update: 2025-06-03 03:48 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், பட்டாசு தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டின் காரிடாரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து எரியத் தொடங்கியது. அவரது உறவினரான சௌந்தர் என்பவரது வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்