கல்லால் அடித்து கொல்லப்பட்ட இளைஞர் - 4 பேர் கைது
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இளைஞரை கல்லால் அடித்துக் கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமயங்குடி கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ட்ரம் செட் மேள இசைக்கு கிராம இளைஞர்கள் ஆர்வமுடன் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது அருண்குமார் என்பவருக்கும் சற்குணம் என்பவருக்கும் இடையே டான்ஸ் ஆடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. சற்குணத்தின் ஆதரவாளர்களான சஞ்சய், சரவணன், திவாகர் உள்ளிட்ட 4 பேரும் அருண்குமாரை சரமாரியாக தாக்கி அவர் மீது கல்லை எடுத்து வீசி உள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து 4 பேரை கைது செய்த லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.