திருப்பத்தூரில் உணவகத்தில் பரோட்டா வாங்கி சாப்பிட்ட
இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் பாலாஜி இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்து பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் ராஜேஸ்வரி தீவிர சிகிச்சை
பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.