பரந்தூர் ஏர்போர்ட் வழக்கு - நீதிபதி தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு

Update: 2025-04-02 04:17 GMT

பரந்தூர் விமான நிலையத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்கலம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுவில், மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி பிறப்பித்த நோட்டீஸ், தமிழ்நாடு தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தல் சட்டத்துக்கு விரோதமானது எனவும், நிலம் கையகப்படுத்துவதற்கு தெரிவித்த ஆட்சேபங்களை பரிசீலிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்