அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு பறந்த உத்தரவு... கமிஷனர் அருண் அதிரடி

Update: 2025-05-23 05:31 GMT

சென்னையில் தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பை அதிகரிக்க மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Vogfx

Card -1 அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். Card -2 அதன்படி, முதியோர்களின் பெயர், வயது, குடும்ப உறுப்பினர்கள், தொடர்பு எண்கள் உள்ளிட்டவை சேகரித்து Card -3 காவல் நிலையங்களில் விவரங்களை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Card -4 முதியோர்கள் வசிக்கும் வீடுகளுக்கு தினமும் சென்று, அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதோடு, Card -5 மூத்த குடி மக்களுக்கான பட்டா புத்தகத்தில் காவலர்கள் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. Card -6 தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு மருத்துவ உதவி தேவையா என்பதை போலீஸார் கேட்டறிய வேண்டும், Card -7 இரவு மட்டும் அல்லாமல் தேவைப்படும் நேரங்களில் ரோந்து பணிகளை முடுக்கி விடவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. Card -8 மூத்த குடிமக்கள் பாதுகாப்பு செயலி, 14567 மற்றும் 1800 180 1253 ஆகிய முதியோர் அவசர உதவி எண்கள் செயல்பாட்டில் இருப்பது குறித்து விழிப்புணர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்