"காட்டுப்பன்றிகளை சுட உத்தரவு" | அமைச்சர் சொன்ன தகவல்

Update: 2025-07-25 14:34 GMT

"காட்டுப்பன்றிகளை சுட உத்தரவு - யானைகளுக்கு மின்வேலி"

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு தொந்தரவளிக்கும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும், யானைகளை கட்டுப்படுத்த மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி முடிவதற்குள்ளாக வனப்பரப்பை 33.3 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்