Kanniyakumari | Accident | கண்ட்ரோலை இழந்த மீன் லாரி - அடுத்தடுத்து மோதியதில் சிதறிய வாகனங்கள்

Update: 2026-01-19 05:25 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்த மீன் லாரி, மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது. அந்த லாரி, எதிரே வந்த மினிடெம்போ, இரு சக்கர வாகனம், 2 கார்கள், கனிமம் ஏற்றி வந்த 2 லாரிகளில் மோதி நின்றது. இந்த விபத்தால் மினிடெம்போவின் முன்பாகம் நசுங்கி, ஓட்டுநர் உள்ளேயே சிக்கிக்கொண்டார். அவரை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர். மேலும் லாரி மோதியதால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாத்தன்கோடு பகுதியை சேர்ந்த ரமேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்