தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி நெல்லையில் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை த.வெ.க நிர்வாகிகள் வழங்கினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் 51ஆவது பிறந்த நாள் விழாவை ஒட்டி நெல்லை வடக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முகமது கனி ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாளையங்கோட்டையில் உள்ள புனிய அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி, த.வெ.க வடக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முகமது கனி ஏற்பாட்டில் நடைபெற்றது. அப்போது விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து நெல்லை வடக்கு மாவட்ட இணை செயலாளர் மரிய ஜான், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உணவு வழங்கினார். பின்னர் நிர்வாகிகள், இட்லி, வடை, கேசரி உள்ளிட்ட உணவுகளை பரிமாறினர். இந்த நிகழ்வை த.வெ.க மீனவர் அணி இணை அமைப்பாளர் இன்பண்ட், பொருளாளர் தாரிக் மற்றும் மீனவர் அணி நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.