சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது,ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே அதிவேகமாக வந்த போது,
சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்த நிலையில், சிசிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.