கன்னியாஸ்திரிகள் கைது - டென்ஸ்டன் ராஜா கண்டனம்

Update: 2025-08-02 13:24 GMT

சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆந்திர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவின் பொறுப்பாளருமான டென்ஸ்டன் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்... இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசும், சத்தீஸ்கர் அரசும் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளான வந்தனா பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி மேரி ஆகியோரை எவ்வித முகாந்திரமும் இன்றி கடந்த ஜுலை 25ல் பஜ்ரங்தல் அமைப்பின் தவறான புகாரின் பேரில் கைது செய்ததை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் மதத்தால் பிரிவினைகளை விதைக்கும் பாஜக ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச சூழ்ச்சிகளை ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த துயர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முதல்வர் ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மை துறை தேசிய தலைவர் இம்ரான் பிரதாப் காரி எம்.பி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கண்டனத்தையும், ஆதரவையும் தெரிவித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், டென்ஸ்டன் ராஜா நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் எவ்வித நிபந்தனையும் இன்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா, கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் டென்ஸ்டன் ராஜா எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்